வாழ்க்கையில் சில விஷயங்களைத் தவிர்க்கவே முடியாது, மரணத்தைப் போல. எப்படியோ ஆரம்பித்த வாழ்க்கை, எதிலோ பயணித்து எங்கோ முடிந்து விடுகிறது. சில விஷயங்களை விரும்பாமலே செய்கிறோம். சிலவற்றை விரும்பியும் கைவிடுகிறோம். வாழ்க்கையின் மிகப் பெரிய சுவாரசியமே நம் மரண தேதி தெரியாதது தான். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் பல நிலுவையில் இருக்க, உங்கள் ஆசைப் பட்டியலில் பல நிராசைகள் இருக்கும் போது உங்கள் மரணம் உங்களுக்கு தெரிய வந்தால்........................
ஆம். அப்பேர்ப்பட்ட கதையம்சம் கொண்ட ஒரு ஹிந்தித் படம் தான் Dasvidaniya - 'The best goodbye ever'. அதன் கதை பல நெகிழ்ச்சியான காட்சிகளைக் கொண்டதனால் அதை நான் இங்கு பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டிய படம். எனக்கு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக, கதையின் நாயகன், தான் சொல்லாத காதலை பல வருடங்கள் கழித்து தான் காதலியிடம் வெளிப்படுத்தும் இடம்!!! (காதல் கைக் கூடாதவர்கள் மனம் உடைந்து அழக் கூடும்)
அன்பின் அடையாளமாய் ஒருவருக்கொருவர் ஏதேனும் பகிர்ந்துக் கொள்ளும் போது அந்த அன்பு இன்னும் வலுப்பெறுகிறது. பரிசுக் கொடுத்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. நாம் விரும்பும் பொருளை மற்றவர்க்கு அளிப்பதை விட அவர் விரும்புவதை அளிக்கும் போதே அர்த்தம் பெறுகிறது. அதை படத்தின் கடைசிக் காட்சி அற்புதமாக விளக்குகிறது.
முடிந்தவரையில் சீக்கிரம் இந்த படத்தை பாருங்கள். கிடைக்காவிட்டால், youtube - யில் பார்ட் பார்ட் ஆக இருக்கிறது. (படம் பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்தால் மிக்க மகிழ்ச்சி)
பின்னோட்டம் அளிக்கையில் தங்களின் "wish - list " யும் பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
13 comments:
லிஸ்ட் ரொம்ப பெருசுங்க :).
The bucket list என்கிற படத்தின் பாலிவுட் காப்பி இந்தப்படம்.
நான் இன்றுதான் உங்க பக்கம் வந்தேன். நீங்க சொன்ன பிறகு இந்தப்படம் பாக்கலாம்னு தோனுது.
எங்க பாக்கனும்?
@ Lakshmi: http://www.youtube.com/watch?v=zX3kFK7S87w
இதிலிருந்து அடுத்த பாகங்களையும் பார்க்கலாம்
கண்டிப்பா பாக்குறேன் தல...
நாக சுப்ர மணியன் ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக, மிக நன்றி. மிகவும் ரசித்துப்பார்த்தேன்.குத்துப்பாட்டு, அடிதடி இல்லாத அழகான படம் பார்த்ததிருப்த்தி கிடைத்தது.
இந்த யூட்யூபில்பாக்கும்போது மிடில் மிடில்ல நடுவில் வட்டம், வட்டமா சுத்தி நின்னு, நின்னு போகுதே. அதைகண்டின்யூவா நிக்காம பாக்கமுடியாதா?
விடாம ஃபுல் படமும் பாத்துட்டேன். மனதை மிகவும் நெகிழசெய்த படம்.
Sounds like a good movie.
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
நான் இன்றுதான் உங்க பக்கம் வந்தேன். நீங்க சொன்ன பிறகு இந்தப்படம் பாக்கலாம்னு தோனுது.
விமர்சனம் பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக, மிக நன்றி.
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
விமர்சனம் அவசியம்
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com
Post a Comment