Tuesday, January 11, 2011

தமிழின் பெருமை

     சில  மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வளமையை  அந்த மொழி கொண்டுள்ள வார்த்தைகளைக் கொண்டும், வார்த்தைகளை கையாள்வதைக் கொண்டும்  கணிக்கலாம். உ.ம்: தமிழில், "உயர்திணை, அஃறினை வேறுபாடு உண்டு. ஆனால், ஆங்கிலத்தில் அது அவ்வளவு தெளிவாக இல்லை. நாம், "நாய் வருகிறது" என்றும், "ராம் வருகிறான்/வருகிறார்" என்றும் குறிப்பிடுவோம். ஆனால் ஆங்கிலத்திலோ "Dog comes", "Ram comes" என்றே குறிப்பிடுவர். நம் பலவீனமே நம் பலத்தை அறியாது தான். இங்கே அருகே உள்ள தஞ்சை பெரிய கோவிலின் பெருமையை வெள்ளையன் சொல்லித் தான் நாம் தெரிந்து கொண்டோம். இப்படி பலவாறு  உண்டு நம் அறியாமை. எங்கோ, என்றோ நான் படித்த கவிதை ஒன்று இப்போது நினைவிற்கு  வருகிறது. அது:

"அதிகம் படிக்காத அப்பாவிற்கு 
ஜேம்ஸ் பாண்ட் தமிழில் 
பேச வேண்டுமாம்;
ஜாக்கி ஜான் தமிழில் 
பேச வேண்டுமாம் - ஆனால் 
நேற்று கான்வென்ட்டில் சேர்ந்த 
அவன் குழந்தை மட்டும் இன்றே 
ஆங்கிலத்தில் பேச வேண்டுமாம்!"

      ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே:


                                     
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" 
(இப்படி சொல்லி ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் உஷார்!)

6 comments:

செந்திலான் said...

நண்பா இந்த மெயில் எனக்கும் வந்தது அதில் பல வார்த்தைகள் தமிழே அல்ல.
கோடிக்கு மேல் அளவிட நம்மிடம் வார்த்தைகளே இல்லை என்பது தான் உண்மை.
கோடிக்கு மேல் நாம் சொல்வது எல்லாம் பத்து கோடி நூறு கோடி என்று தான்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

பெருமையாக இருக்கிறது !

Nagasubramanian said...
This comment has been removed by the author.
Nagasubramanian said...

@ senthil: oh! then sorry for giving wrong information

G.M Balasubramaniam said...

திரு. நாகசுப்பிரமணியம் நீங்கள் வருத்தப்பட இதில் ஏதும் இல்லை. எண்களை கணக்கிட அவற்றின் வீச்சை நம் முன்னோர் அறிந்திருந்தனர் என்ற சேதியே முக்கியம். வேற்று மொழி சொற்களை தமிழில் கையாளுவதில்லையா.? தமிழா இல்லையா என்ற சர்ச்சை தேவையில்லாத ஒன்று. உங்கள் பகிர்வுக்கு நன்றி.

ஜீவி said...

அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

Post a Comment