Wednesday, August 7, 2013

மரித்த மனிதம்



மற்றுமொரு அவசரக் 
காலைப் பொழுது 
அலுவலகம் செல்ல.
என் வீட்டின் வெளியே
காயமடைந்த காகமொன்று 
வலியில் அலறிக்கொண்டிருந்தது.
செய்வதறியாத சககாக்கைகள் 
மரத்தின்மீதிருந்து துடித்துக்கொண்டிருந்தன.
சலனமற்று கடக்கிறேன் நான் - 
சகமனிதனின் விபத்தைக் 
கண்டுகொள்ளாததைப் போலவே. 


3 comments:

G.M Balasubramaniam said...


அன்பின் நாகா, நேற்று மதியம் இரண்டு பேர் என் வீட்டு மொட்டை மாடிக்கு விரைந்தனர். ஒரு காக்கைக் குஞ்சை ஒரு பெரிய காகம் கொத்தித் துன்புறுத்துவது கண்டு அது எங்கள் மாடியில் வந்ததும் இவர்களும் விரைந்து பெரிய காகத்தைத் துரத்தி குஞ்சை விடுவிக்க முனைந்தனர்.. இவர்கள் மாடிக்குச் செல்லும் முன் குஞ்சு எங்கோ தப்பித்துப் போய்விட்டது. மரிக்காத மனிதத்தையும், காகத்தின் குரூர செயலையும் காண நேர்ந்தது. ஒரு வேளை இது எக்செப்ஷனோ.?

Anonymous said...

arumai.

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதம் மரித்துத்தான் போய்விட்டது

Post a Comment