Saturday, July 27, 2013

கணினியும் நானும் ( தொடர் பதிவு )



     தொடர்பதிவுக்கு அழைத்த G M பாலு சாருக்கு நன்றி.

     பத்தாம் வகுப்பு வரை கணினி எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இல்லாத ஒரு விசயத்தில் எப்போதுமே எனக்கு ஈர்ப்பு இருந்ததில்லை, இன்றுவரை. கணினியோ, அலைபேசியோ அது என்னுடைமை ஆகும்வரை அதை எப்படி பயன்படுத்துவது என்பதில் நான் கவனம் செலுத்தியதாக ஞாபகம் இல்லை.

     உயர்நிலைப் படிப்பை முடித்து மேனிலை படிப்புக்கு பள்ளி மாறுவதென (மாற்றியே ஆக வேண்டுமென) வீட்டில் கேட்டிருந்தமையால் எங்கள் ஊரிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்று உயிரியல் பாடத்திட்டத்தில் (கணிப்பொறி பற்றிய என் ஞானத்தின்பால் எனக்குள்ள அச்சத்தால்) இடம் கேட்டோம். அவர்களோ கணிப்பொறி பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக சொன்னார்கள். வேறுவழியின்றி அதிலேயே சேர்ந்தேன்.

     அன்று கணினி செயல்முறை பாடவேளை. எனது ஆசிரியர் கணினியில் ஏதாவது செய்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கோ அதை எப்படி உயிரூட்டுவது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். உயர்நிலை வரை என்னுடன் படித்தவன் ஒருவனும் என் வகுப்பிலேயே இருந்ததால் அவனை அணுகி உதவுமாறு கேட்டேன். ஆனாலும் சில வகுப்புகள் வரை என்னுள் இருந்த பயம் தணியவில்லை. எனக்கு என்ன பயமென்றால், நான் ஏதாவது செய்ய போய், கணினியின் பயன்பாடுக்கு பங்கம் வந்து, அதற்கென திட்டுவார்களோ என்று.

     அதேவேளையில் இன்னொன்றும் கூறியாக வேண்டும்.  நாங்கள் செயல்முறை பாடவேளையில் இருக்கும் அதே நேரத்தில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பிள்ளைகளும் வருவார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல் கணினியில்  கற்றுக்கொண்டிருப்பார்கள். நானோ  MSPaint, Desktop wallpaper, screensaver போன்றவைகளையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

     ஆனால் இன்று நான் மென்பொருள் துறையில் (IT) இருக்கிறேன். எது எனக்குத் தெரியாதோ வாழ்க்கை அதை நோக்கி தள்ளுகிறது. நீரில் விழுந்த பிறகே நீச்சல் கற்றுக்கொள்கிறேன், எப்போதும்.

 

6 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பலரும் கணினியை பார்த்து பயந்துள்ளார்கள்... உங்களைபோல

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்கமான அனுபவம்... படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பது இன்றைக்கு சிரமம் தான்...

இராஜராஜேஸ்வரி said...

நீரில் விழுந்த பிறகே நீச்சல் கற்றுக்கொள்கிறேன், எப்போதும்.

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

நிலாமகள் said...

நீரில் விழுந்த பிறகே நீச்சல் கற்றுக்கொள்கிறேன//

நல்லது.

G.M Balasubramaniam said...


இப்போதெல்லாம் சிறு குழந்தைகளும் கணினியில் படு சுட்டிகளாக இருப்பது அவர்கள் சிறுவயதிலிருந்தே அந்த சூழலுக்கு எக்ஸ்போஸ் ஆவதால்தானோ. பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

நீரில் விழுந்த பிறகே நீச்சல் கற்றுக் கொண்டேன்,
அருமை, தொடருங்கள்

Post a Comment