குடித்திருப்பவனும்,
குடிக்க அழைக்கப்பட்டாலும்
குடிக்காமல்
கண்ணியம் காப்பவனும்
கலந்துரையாடுகிறார்கள்
கடவுளையும் சாத்தானையும் பற்றி.
மது அருந்தும் சாத்தான்
தான் அருந்துவது அமிர்தம் என்கிறது.
வேடிக்கை பார்க்கும்
கடவுளுக்கே தெரியும்
அது விஷம் என்று.
கடவுளுக்கு பகிர்ந்தளித்து
சாத்தான் தெய்வத்தன்மை
அடைய முயல்கிறது
நரகத்தின் ஒரு படி முன்னேறி.
விஷம் எனும் அமிர்தம் தவிர்த்து
சாத்தானை தோள் சாய்த்து
அழைத்துப் போகிறார் கடவுள்
சொர்கத்தின் ஒரு படி கீழ் இறங்கி.
5 comments:
Suberb....Nuchhhhhh....
கவிதை அருமை தோழரே...
nandraayirukkirathu naga. vaazhthugal.
அருமையான கவிதை. அதிலும் அந்த கடைசி எட்டு வரிகள் நச். (அந்த எட்டு வரிகளே தனிக் கவிதைதான்). வாழ்த்துக்கள்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை, அவ்வளவு அருமையான கவிதை!
Post a Comment