Saturday, February 5, 2011

என் இலையுதிர்க்காலம்


என்னிடம் கிடைக்கப் பெறாத 
நிழலைப் பற்றியே 
எல்லோரும் பேசுகிறார்கள்.
என் கிளை மேல் 
அமர்ந்து இளைப்பாற 
ஏனோ அவர்கள் யோசிப்பதேயில்லை.


9 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மெல்லிய உணர்வு பரப்பும் நிழலான அழகுக் கவிதை. சபாஷ் நாக்ஸ்.

ஜீவி said...

இருப்பதை அனுபவிக்க யாருக்கும் தயக்கமில்லை;
அந்த அனுபவிப்பின் ஊடேயே இல்லாததைச் சுட்டிக்காட்டுவதில் யாரும் தவறுவதுமில்லை!
இந்த வரிகளை மனிதர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இரண்டே வரிகளில் ஆழ்ந்த உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள்!..

மேல் நாடுகளில் மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கவிருக்கிற ஃபால் சீசனில் தான் சுற்றுலா களைகட்டும். அந்த பழுப்பு நிற இலைகளைப் பார்த்து நன்றி சொல்கிற மாதிரி கூட்டம் அம்மும். இதே மரம்
ஸ்நோ சீசன் தாண்டி பச்சை இலைகளுடன் பளபளக்கும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இயற்கையின் வரங்களை மதித்து அவற்றுடன் ஒன்றிய வாழ்வு வாழும் சமூகம் பாக்கியம் செய்தது.

Chitra said...

அருமை.

ksground said...

IT WAS VERY USEFUL MESSAGE - http://www.arisingsoft.com/

MANO நாஞ்சில் மனோ said...

அழகான ஹைக்கூ...

G.M Balasubramaniam said...

BY NATURE, HUMAN BEINGS FEEL THEMSELVES SUPERIOR ONLY BY POINTING OUT THE SO CALLED DEFICIENCIES IN OTHERS. I AGREE WITH JIVI ON HIS COMMENTS.YOU HAVE SUBTLY BROUGHT OUT THE FEELINGS OF THE FELLOW HUMAN BEINGS.GOOD PIECE OF WRITING, NAGASUBRAMANIAM.

Unknown said...

அட அட
முதல் முறை
நல்ல இருக்கு அண்ணா

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இப்போதுதான் பார்க்கிறேன்.

ஜீவியின் பின்னூட்டம் எத்தனை அழகு உங்கள் கவிதை போலவே.சபாஷ் ஜீவி.

vasan said...

நிழலில் இளைப்பார வேண்டின் இலைக‌ள் வேண்டும் தானே நாகா?

Post a Comment