ஒரு பையன் அவன் அப்பாவிடம், "அப்பா, காதல்னா என்னப்பா?" என்று கேட்டான்.
உடனே அவனது அப்பா,"சரி, நான் சொல்ற மாதிரி செய். நம்ம வயலுக்கு போ. அங்க இருக்கறதுலேயே பெரிய நெல்லா பார்த்து கொண்டு வா. ஆனா ஒரே ஒரு கண்டிஷன். நீ ஒரு நெல்லை கடந்து போய்டா அந்த நெல்லை மறுபடியும் திரும்பி வந்து பார்க்க கூடாது."
பையனும் சரின்னு போனான். அப்படியே ஒவ்வொரு நெல்லா பார்த்துட்டே வந்தான். அப்படி ஒரு பெரிய நெல்லை பார்த்ததும், "ஏன் இதைவிட பெரிய நெல் நமக்கு கிடைக்குமே "னு அடுத்தடுத்து பார்த்துட்டே போனான். கடைசி நெல்லை அவன் பார்க்கும் போது," அட இத விட பெரிய நெல்லை எல்லாம் விட்டுடேமே" னு வருத்தத்தோட கிடைச்ச சின்ன நெல்லோட வீட்டுக்கு வந்தான்.
அவனை பார்த்த உடனே அப்பா,"என்ன?"னு கேட்டார்.
மகன்,"அப்பா, எனக்கு காதல்னா என்னனு புரிஞ்சிடுச்சு. அப்ப கல்யாணம்னா என்ன?" னு கேட்டான்.
அப்பா,"சரி! இப்ப நீ நம்ம சோளக்காட்டுக்கு போ. அங்க இருக்கறதுலேயே பெரிய சோளமா பார்த்து எடுத்துட்டு வா. ஆனா நீ ஒரு சோளத்தை கடந்து போய்டா அந்த சோளத்தை மறுபடியும் திரும்பி வந்து பார்க்க கூடாது."
இந்த முறை பையன் கொஞ்சம் தெளிவோட தனக்கு கிடைச்ச ஓரளவுக்கு பெரிய சோளத்தையே முழு திருப்தியுடன் கொண்டு வந்தான்.
வீடு திரும்பிய மகனைப் பார்த்ததும் ,"என்ன?" னு கேட்டார்.
"அடுத்து ஏதோ ஒண்ணு பெருசா கெடைக்கும்னு மனசு அலைபாயறது காதல், கிடைச்ச சின்ன விஷயத்துலையே திருப்தி அடையறது தான் கல்யாணம்"
"ஹ்ம்ம்..."

12 comments:
அழகான விளக்கத்துடன் காதலையும் , கல்யாணத்தையும் விளக்கி கூறிய உமக்கு நன்றிகள் ...
பதிவு அருமை
Ha ha.. Nice :)
ஜோர் நாக்ஸ்.
சின்ன நெல்லையும் சின்ன சோளத்தையும் வெச்சு பெத்த விஷயம் சொல்லிட்டீங்க.
சபாஷ்.
உங்க ரசனை எல்லார்ட்டேருந்தும் விலகி வெர்சடைலா இருக்கு. ஒவ்வொண்ணா படிச்சுக்கிட்டும் பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் வர்றேன்.
சீக்கிரம் முடிச்சுட்டு கமெண்ட் பண்றேன் பாஸ்.
காதல், கலியாணம் இரண்டையும் வித்யாசமான கோணத்தில் காண்கிறான் பையன். எங்கோ நெருடுகிறதே. தேடிப்பிடித்து வருவதல்ல காதல், கண்ணோடு கண்நோக்கும்போது மனதில் ஒருசேர இருவர் உள்ளத்திலும் மலர்வதே காதல். கிடைத்தது கொண்டு திருப்தி அடைவது கல்யாணம் என்பது ஓகே.
//"அடுத்து ஏதோ ஒண்ணு பெருசா கெடைக்கும்னு மனசு அலைபாயறது காதல், கிடைச்ச சின்ன விஷயத்துலையே திருப்தி அடையறது தான் கல்யாணம்//
ஃபைனல் டச்சிங் சூப்பர்...
ஆஹா.... எனக்கு இப்போ நல்லா புரிஞ்சிடுச்சே! சூப்பர் கதை!
அழகான விளக்கம்.அப்பாவையும் மகனையும் பேசவைத்து ஒரு கருத்தைச்சொன்னவிதம் அழகு.
அருமையான விளக்கக் கதைகள் காதலுக்கும் கல்யாணத்துக்கும்.
எத்தனை வருடமாச்சு இந்திப் பாடல்கள் கேட்டு. பகிர்வுக்கு நன்றி.
போன இடுகைக்கு பின்னூட்டம் இடவில்லை. மன்னிக்கவும். காரணம் நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை. அதிலும் ஆங்கில சினிமா கல்லூரிக் காலத்தோடு சரி.
ஹஹஅஹா
ம் சோ சிம்பிள் அண்ட் ஸ்வீட்
இதைவிட
யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க
அதாவது...உங்க போஸ்ட் போல ..
நல்லாயிருக்கு நாகா, நீங்க சொன்ன விதம். நல்ல அப்பா... நல்ல பிள்ளை!
காதல் அது ஒரு கற்பனை.
கண்டு கொண்டுவிட்டால் அற்பதம்.
கற்பனையைப் போல் ஒரு அற்புதமில்லை.
ஆனாலும் கண்டதை, யாரும் கற்பனை என்பதில்லை.
சின்ன கதை, பெரிய தத்துவம்.
Post a Comment