Sunday, September 19, 2010

எதற்காக இந்த ப்ளாக்?

நண்பர்களே,
       ஒரு ஓவியத்தை எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்கும் ஓவியனைப் போல தான் நானும் யோசித்து கொண்டிருக்கிறேன், இந்த ப்ளாக்-ஐ  எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று.

       ஒரு ப்ளாக்-ஐ தொடங்க வேண்டும் என்று நான் எண்ணிய பொழுதில் இருந்தே சில ப்ளாக் - களை வாசித்தேன்.ஆனால் பெரும்பாலும் அவை தனி மனிதனின் வாழ்கை குறிப்பு போலவே இருந்தன.

        அப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்னுடையதும் அப்படி இருக்க கூடாது என்று. ஆனாலும் அனுபவங்கள் அன்றி ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவும், புரிய வைக்கவும் முடியாது. அதனால் என் வாழ்வின் சில துளிகள் மட்டும் அங்கங்கே சாரல் போல பெய்யும்.

                                                      
         சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" போல தான் இந்த ப்ளாக்கும். 
நான் கற்ற , சந்தித்த மனிதர்கள், மேற்கொண்ட பயணங்கள், பாதித்த சம்பவங்கள், பார்த்த சினிமா,  படித்த புத்தகம் மட்டுமே...

         
         என் வாழ்கை "நதியில் விழுந்த  இலை" போல தான்.....
             வாழ்கையின் ஒரு கரை அழகாய் இருக்கிறது;
             மறுகரை அழகற்றதாய் இருக்கிறது.ஆனால்-
            அதனதன் இயல்பில் செல்வது தானே நதியின் அழகு!

         
         
        
        

7 comments:

shammi's blog said...

good ...wish you a nice journey of your stride....

Unknown said...

Great macho...
Keep Goin..

james appollo said...

good work dude.....

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

// வாழ்கையின் ஒரு கரை அழகாய் இருக்கிறது;
மறுகரை அழகற்றதாய் இருக்கிறது.ஆனால்-
அதனதன் இயல்பில் செல்வது தானே நதியின் அழகு!//

Great lines Naga !

Anonymous said...

Great dude..but expecting much more from u..your are much more capable than this...

vasan said...

'இக்க‌ரைக்கு அக்க‌ரை ப‌ச்சை'
நதியின் அழகு நீரால்,
நீரின் பெருமை ந‌தியால்.
வாழ்த்துக்க‌ள் நாகாஸ்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலைகளே நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றன.
தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment