நதியில் விழுந்த இலை
Saturday, September 13, 2014
காதல் மழை
மழை வருகிறது
ஒதுங்கிவிடலாம் என்கிறாய்.
குடை இருக்கிறது
சேர்ந்துவிடலாம் என்கிறேன்.
Sunday, August 31, 2014
தேவதையின் தரிசனம்
நீ எப்போதாவது
தேரடியில் நடந்துவரும்
அழகைக் காணவே
எப்போதும் காத்திருக்கின்றன
கோபுரத்து பாவைகள்!!!
Tuesday, August 26, 2014
கவிஞனின் வெட்கம்
கவிதை என்னவோ
உன்னைப் பற்றியதுதான்.
ஆனால்-
கன்னம் சிவந்ததோ
எனக்கு!!!
Sunday, August 24, 2014
கடவுளா? மிருகமா?
என்னில் காணும் தெய்வத்தைக்
கண்டு ஆச்சரியம் கொள்வதாக
சொல்கிறாய்.
ஆனால்-
அது மிருகத்தின் மாறுவேடம்
என்பதை உன்னிடம்
சொல்ல நினைப்பது
என்னுள்ளிருக்கும்
கடவுளா? மிருகமா?
Sunday, July 20, 2014
நீ+நான் = காதல்
என் கோடையின்
முதல் மழைத்துளி நீ!
உன் இலையுதிரின்
கடைசி இலை நான்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)