Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, June 19, 2021

நினைவின் மிச்சம்


எல்லாம் கடந்து 
வந்த பின்பும் 
இன்னும் ஏதோவொன்று 
கடக்க இருப்பதை போல 
எல்லாம் மறந்துவிட்ட  
பின்பும் இன்னும் 
ஏதோவொரு நினைவு 
மிச்சமிருக்கிறது 
மறப்பதற்கென்று.






Wednesday, August 19, 2020

தற்கொலை

 


மகன்களின் 
தற்கொலைகள் 
சமயங்களில் அப்பாக்களால் 
நிகழ்த்தப்படும் 
மறைமுக படுகொலைகள்...

Saturday, July 11, 2020

அன்பின் பாசாங்கு


இறந்தவரின் 
உடல் முன் 
அரங்கேறும் பெரும்பாலான 
நிகழ்வுகள் யாவும் 
முகத்திரைப் போர்த்திய 
அன்பின் பாசாங்குகளே!!!




Tuesday, June 16, 2020

வாழ்வின் ரகசிய உடன்படிக்கை


வாழப் பிடிக்கவில்லை 
எனினும் வாழ்தல் 
அவசியமாகிறது -
யாரோ அல்லது ஏதோ 
ஒன்றின் பொருட்டு.
மரணிக்கும் தருவாயில் 
எல்லாம் முழுமையடையும் 
பட்சத்தில் இச்சமரசத்திற்கு 
உடன்படுகிறேன் மிக 
ரகசியமாக...


Monday, March 23, 2020

நினைவின் குமிழிகள்


மனதின் ஏதோவொரு 
கொதிநிலையில் 
உடைந்து அடங்குகின்றன 
நினைவுக் குமிழிகள்.

Saturday, March 7, 2020

நட்பின் அடர்த்தி


அணுகுவதற்கோ, விலகுவதற்கோ 
எவ்வித சிரமமுமின்றி ஒரே 
இடத்தில் சிலையென 
நிலைக் கொண்டிருக்கிறேன்.
உங்களின் முன் நகர்வோ 
பின் நகர்வோதான் நம் 
உறவின் அடர்த்தியை 
நிர்ணயிக்கிறது காலங்காலமாக.




Saturday, June 22, 2019

காதல் > புரிதல்


உன் புரிதலுக்குள் 
அடங்காது என் 
காதல்.


Sunday, May 26, 2019

தேடலின் சாபம்

தேடல் ஒரு மனிதனை 
என்ன செய்யும்?
என்னவெல்லாமோ செய்யும் -
அவனை ஒன்றும் ஆகவிடாமல் 
செய்வதையும் சேர்த்து.



Saturday, March 2, 2019

Pencil கிழவன்



ஏதோ ஒன்றை வரைய 
பென்சிலைத் தேடிக் 
கொண்டிருக்கும் அச்சிறுவனிடம் 
கிடைக்கிறது அவன் பிஞ்சுக் 
கைகளுக்குள்கூட அகப்படாத 
சிறு பென்சில்.
தன்னால் கூர்தீட்டிட முடியாத 
அப்பென்சிலைத் தன் தாத்தாவிடம் 
கூர்த்தீட்டிட கேட்கிறான்.
உடலும் சில நினைவுகளும் மட்டுமேயுள்ள 
இரு கிழவர்களும் ஒருவரை ஒருவர் 
பார்த்துக் கொள்கின்றனர் 
மிக அமைதியாக....


Saturday, February 16, 2019

திசைகள்


பிரிந்தே கிடக்கும் 
எதிரெதிர் துருவங்களான 
கிழக்கையும் மேற்கையும் 
மிக அமைதியாக 
கைகோர்த்து பிணைத்தே 
வைத்திருக்கின்றன 
வடக்கும் தெற்கும் 
காலங்காலமாக...

Friday, June 2, 2017

என்னை வாசிக்கும் புத்தகங்கள்


அலுவல் நிமித்தமாக
அலைந்து திரியும் என்னை  -
பல நாட்களாய்
சட்டை செய்யப்படாத
எனது அலமாரிப் பபுத்தகங்கள்
வாசிக்கின்றன
மிக உன்னிப்பாக.

Tuesday, May 30, 2017

மூன்றாம் உலகப்போர்


பிரபஞ்ச அமைதி...
மூன்றாம் உலகப் போரில்
கடைசியாய் வெடித்த அணுகுண்டு.


Saturday, May 27, 2017

இயலாமை





என் 
இயலாமை, ஆற்றாமையின் மீது 
கல்லெறியாதீர்கள்.
எளியன மீது
நீங்கள் கட்டவிழ்க்கும் வன்முறை
ஒருபோதும் உங்களை
பெருமைக் கொள்ள வைக்கப்போவதில்லை. 


Saturday, May 30, 2015

கருத்தரிக்கும் காதல் மேகம்



நீயும் நானும் 
ஒன்றாக கரம் சேர்த்து 
தாங்கிய மழைத்துளிகளின் 
பிராத்தனையால் 
கருத்தரித்தது 
மற்றுமொரு மேகம்!!!



Sunday, March 22, 2015

கனாக்காதலி

 
தலைக் கோதி
உறங்கச் சொல்கிறாய்.
ஆனால்-
நான் உறங்கும்
முன்னே
என் கனவில்
நுழைந்துவிடுகிறாய்.
 



Sunday, November 23, 2014

நாத்திகம் VS பகுத்தறிவு


நாத்திகம்தான் பகுத்தறிவு என
எண்ணிக் கொண்டிருக்கும் மூடர்
ஒருபோதும் அறியார்
கடவுள் உண்டென்றும்;
இல்லையென்றும்.


Tuesday, November 11, 2014

பூவிதழ்


உன் இதழ்களின் மீது 
வட்டமிடும் சிறு 
வண்ணத்துப்பூச்சி 
என் இதழ்.




Tuesday, November 4, 2014

காதல் பெருமழை



நீ குடை
கொண்டுவருவாய் என நானும்
நான் குடை
கொண்டுவருவேன் என நீயும்
இறுதி வரையில்
நனைந்தே திளைக்கிறோம்
இப்பெருமழையில்.


Friday, October 24, 2014

முத்தம் - வெட்கம்


முத்தம் நான்.
வெட்கம் நீ!!


Saturday, October 4, 2014

காத்திருக்கும் கொலு பொம்மைகள்


நீ கொலு 
பார்க்க வரும் 
அழகைக் காணவே 
வீட்டில் அடுக்கப்பட்டிருக்கின்றன 
பொம்மைகள்.