நதியில் விழுந்த இலை
Saturday, February 15, 2014
ராக தேவன்
இரவின் மடியில்
ஒரு குழந்தையாக நான்.
தாலாட்டும் ராக தேவனாக
இளையராஜா....
Sunday, February 9, 2014
நடைபயிற்சி
யார் நடைபயில்கிறார்கள்
பூங்காவிற்கு வரும்
தாத்தா பேரன்களில் ?
Monday, February 3, 2014
காத்திருக்கிறேன் உன் ஒற்றை அழைப்புக்கு
உன்னிடம் கோபம் கொள்ள
எத்தனை நியாயமான காரணங்கள் இருந்தும்
என்னால் அத்தனை சுலபமாக
கோபிக்க முடியவில்லை.
நினைத்துக் கொள்கிறேன் -
உனக்கு அனுப்பப்படாத
என் கடிதங்களைப் போலதான்
என்னை நீ
அழைக்காததும், சந்திக்காததும்!
Tuesday, January 14, 2014
வனத்தை தொலைத்த மிருகம்
வனத்தில் என்னைத்
தொலைத்த போதுதான்
புரிந்தது
வனத்தை தொலைத்த
மிருகத்தின் வாழ்வை.
Wednesday, January 8, 2014
சொர்க்கத்தின் நிழல்
காதலென்பது
பூமியின் மீது விழும்
சொர்க்கத்தின் நிழல்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)