Saturday, March 2, 2019

Pencil கிழவன்



ஏதோ ஒன்றை வரைய 
பென்சிலைத் தேடிக் 
கொண்டிருக்கும் அச்சிறுவனிடம் 
கிடைக்கிறது அவன் பிஞ்சுக் 
கைகளுக்குள்கூட அகப்படாத 
சிறு பென்சில்.
தன்னால் கூர்தீட்டிட முடியாத 
அப்பென்சிலைத் தன் தாத்தாவிடம் 
கூர்த்தீட்டிட கேட்கிறான்.
உடலும் சில நினைவுகளும் மட்டுமேயுள்ள 
இரு கிழவர்களும் ஒருவரை ஒருவர் 
பார்த்துக் கொள்கின்றனர் 
மிக அமைதியாக....


Saturday, February 16, 2019

திசைகள்


பிரிந்தே கிடக்கும் 
எதிரெதிர் துருவங்களான 
கிழக்கையும் மேற்கையும் 
மிக அமைதியாக 
கைகோர்த்து பிணைத்தே 
வைத்திருக்கின்றன 
வடக்கும் தெற்கும் 
காலங்காலமாக...

Friday, June 2, 2017

என்னை வாசிக்கும் புத்தகங்கள்


அலுவல் நிமித்தமாக
அலைந்து திரியும் என்னை  -
பல நாட்களாய்
சட்டை செய்யப்படாத
எனது அலமாரிப் பபுத்தகங்கள்
வாசிக்கின்றன
மிக உன்னிப்பாக.

Tuesday, May 30, 2017

மூன்றாம் உலகப்போர்


பிரபஞ்ச அமைதி...
மூன்றாம் உலகப் போரில்
கடைசியாய் வெடித்த அணுகுண்டு.


Saturday, May 27, 2017

இயலாமை





என் 
இயலாமை, ஆற்றாமையின் மீது 
கல்லெறியாதீர்கள்.
எளியன மீது
நீங்கள் கட்டவிழ்க்கும் வன்முறை
ஒருபோதும் உங்களை
பெருமைக் கொள்ள வைக்கப்போவதில்லை.