என்னில் காணும் தெய்வத்தைக்
கண்டு ஆச்சரியம் கொள்வதாக
சொல்கிறாய்.
ஆனால்-
அது மிருகத்தின் மாறுவேடம்
என்பதை உன்னிடம்
சொல்ல நினைப்பது
என்னுள்ளிருக்கும்
கடவுளா? மிருகமா?
தினமும் தன் உணவைத் தானே சமைத்து உண்ணும் மத்திம வயது பிரமச்சாரி உணர்வான் அலுவலகம் சென்று வந்து தன் குடும்பத்துக்கு முகம் சுளிக்காமல் சமைத்துப் போடும் குடும்பத் தலைவியின் பேரன்பை; பெருமூச்சை.