Sunday, July 20, 2014

நீ+நான் = காதல்


என் கோடையின்
முதல் மழைத்துளி நீ!
உன் இலையுதிரின்
கடைசி இலை நான்!





Sunday, June 1, 2014

ஊரோடு தங்கிவிட்ட சிறுதெய்வங்கள்


பெருந்தெய்வங்களைப் போல 
அத்தனை சாமர்த்தியம் போதவில்லை 
சிறுதெய்வங்களுக்கு -
தன் மக்களோடு 
பெருநகரங்களிலும், அயல்நாடுகளிலும் 
கிளைப் பரப்ப.
 
 

Tuesday, May 13, 2014

ஆண்களின் வாழ்க்கை



யாரோ...தோழி...காதலி...மனைவி
யாரோ...காதலி...தோழி...யாரோ
யாரோ...யாரோ...யாரோ...யாரோ
அவ்வளவுதான் ஆண்களின் வாழ்க்கை.
 
 

Monday, May 5, 2014

குடும்பத் தலைவி


தினமும் தன் உணவைத் தானே
சமைத்து உண்ணும்
மத்திம வயது பிரமச்சாரி உணர்வான்
அலுவலகம் சென்று வந்து
தன் குடும்பத்துக்கு
முகம் சுளிக்காமல்
சமைத்துப் போடும்
குடும்பத் தலைவியின்
பேரன்பை; பெருமூச்சை.
 
 




 

Wednesday, April 30, 2014

வானம்



சமுத்திரத்தின் நடுவே 
அவ்வப்போது வந்துபோகும் அலைகள் 
மேகங்கள்.