Tuesday, May 13, 2014

ஆண்களின் வாழ்க்கை



யாரோ...தோழி...காதலி...மனைவி
யாரோ...காதலி...தோழி...யாரோ
யாரோ...யாரோ...யாரோ...யாரோ
அவ்வளவுதான் ஆண்களின் வாழ்க்கை.
 
 

Monday, May 5, 2014

குடும்பத் தலைவி


தினமும் தன் உணவைத் தானே
சமைத்து உண்ணும்
மத்திம வயது பிரமச்சாரி உணர்வான்
அலுவலகம் சென்று வந்து
தன் குடும்பத்துக்கு
முகம் சுளிக்காமல்
சமைத்துப் போடும்
குடும்பத் தலைவியின்
பேரன்பை; பெருமூச்சை.
 
 




 

Wednesday, April 30, 2014

வானம்



சமுத்திரத்தின் நடுவே 
அவ்வப்போது வந்துபோகும் அலைகள் 
மேகங்கள்.
 

Sunday, April 13, 2014

விண்மீன்களின் ரகசியம்



என்னதான் ஆதவன் பிரகாசித்தாலும்
விண்மீன்கள் தெரிவதென்னவோ
நிலவொளியில்தான்.

 

Wednesday, April 2, 2014

மீன் தொட்டி


கண்ணாடித் தொட்டியில் 
நீந்தும் மீனுக்குத் தெரியுமா 
தான் நீந்துவது எந்த நீரிலென்று?