Monday, February 3, 2014

காத்திருக்கிறேன் உன் ஒற்றை அழைப்புக்கு


உன்னிடம் கோபம் கொள்ள
எத்தனை நியாயமான காரணங்கள் இருந்தும் 
என்னால் அத்தனை சுலபமாக 
கோபிக்க முடியவில்லை.
நினைத்துக் கொள்கிறேன் - 
உனக்கு அனுப்பப்படாத 
என் கடிதங்களைப் போலதான் 
என்னை நீ 
அழைக்காததும், சந்திக்காததும்!



Tuesday, January 14, 2014

வனத்தை தொலைத்த மிருகம்


வனத்தில் என்னைத்
தொலைத்த போதுதான்
புரிந்தது 
வனத்தை தொலைத்த
மிருகத்தின் வாழ்வை.



Wednesday, January 8, 2014

சொர்க்கத்தின் நிழல்


காதலென்பது
பூமியின் மீது விழும்
சொர்க்கத்தின் நிழல். 


Tuesday, January 7, 2014

மனப் போராட்டம்


கடவுளும் சாத்தானும் 
என்னுள் மூர்க்கமாக
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எவர் வென்றாலும்
நான் சரணடைவதைத் தவிர
வேறு வழியில்லை.


Saturday, January 4, 2014

காதல் கைதி


காதலென்பது சிறையெனில் 
அதில் நானொரு 
ஆயுள் கைதி!