நதியில் விழுந்த இலை
Friday, June 8, 2012
சருகாகும் என் காதல்
சாலையில்
நீ கடந்து செல்கையில்
உன் மேல் விழும்
பூக்கள்
கேலிபேசுகின்றன
சருகாகும்
என் காதலை.
Monday, June 4, 2012
கவிதைத் தோட்டம்
உன் பிரிவு
அழைத்துச் செல்லும்
திசையில்
இருக்கிறது
என்
கவிதைத் தோட்டம்!
Thursday, May 17, 2012
மழைத்தேடல்
விளையாட்டாய்
கடலில் கால்
நனைத்துச் சென்றுவிட்டாய்.
மழையாய் மாறி
உனைத் தேடும்
கடலின் பரிதவிப்பை
நான் மட்டுமே அறிவேன்.
Tuesday, May 15, 2012
இறகின் பயணம்
காற்றின் கைப்பாவை
சிறகைப் பிரிந்த
இறகு!
Friday, May 11, 2012
காதல்
எதன் பொருட்டு
வாழுதல் சுகமோ
அதன் பொருட்டு
சாவதும் சுகமே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)